ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு அணி 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்:   டெல்லி - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை
Published on

முதல் இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பையை வீழ்த்தி அட்டகாசமாக தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே (பெங்களூருவுக்கு எதிராக) வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது. அந்த அணியில் லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 357 ரன்) சூப்பர் பார்மில் உள்ளார். நிதிஷ் ராணா, ரிஸ்வி, டிரிஸ்டான் ஸ்டப்சும் நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் தான் மெச்சும்படி இல்லை. பஞ்சாப்புக்கு எதிரான ஆட் டத்தில் 264 ரன்கள் குவித்த போதிலும் தோல்வியை தழுவியது. அதற்கு காரணம், 6 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டனர். பவர்-பிளே பந்து வீச்சிலும், கேட்ச் செய்வதிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என அந்த அணியின் கிரிக்கெட் இயக்குனர் வேணுகோபால் ராவ் தெரிவித்துள்ளார். பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் கீழே விழுந்து தலையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் இங்கிடி இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. அதே சமயம் அணியுடன் இணைந்துள்ள இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் களம் இறங்கினால், பந்து வீச்சு வலுவடையும்.

இதுவரை 7 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூரு அணி 5-ல் வெற்றி (ஐதராபாத், சென்னை, மும்பை, லக்னோ, குஜராத்துக்கு எதிராக), 2-ல் தோல்வி (ராஜஸ்தான், டெல்லிக்கு எதிராக) என 10 புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. முந்தைய குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 206 ரன் இலக்கை 7 பந்து மீதம் வைத்துஎட்டிப்பிடித்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசினர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, ஹேசில்வுட், புவனேஷ்வர்குமார் பலம் சேர்க்கிறார்கள். இந்த சீசனில் ஏற் கனவே டெல்லியுடன் மோதிய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி இப்போது அவர்களது இடத்தில் பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்பதால் இங்கு ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com