ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்- டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது வெற்றியை குறிவைத்து ஐதராபாத்-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்:  ஐதராபாத்- டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
Published on

ஐதராபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. 2-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது. அடுத்த இரு ஆட்டங்களில் லக்னோ, பஞ்சாப்பிடம் பணிந்தது. முந்தைய இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், சென்னையை பதம் பார்த்தது.

அந்த அணியில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென் (283 ரன்), கேப்டன் இஷான் கிஷன் (213 ரன்), அபிஷேக் ஷர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, டிரா விஸ் ஹெட் என அதிரடி சூரர்களுக்கு குறைவில்லை. சென்னைக்கு எதி ரான ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா 15 பந்துகளில் அரைசதம் விளாசி கவனத்தை ஈர்த்தார். பந்து வீச்சில் இஷான் மலிங்கா, பிரபுல் ஹிங்கே, சகிப் ஹூசைன், ஷிவாங் குமார் நம்பிக்கை அளிக்கின்றனர்.

டெல்லி அணி முதல் இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பையை வீழ்த்தியது. அதன் பிறகு குஜராத், சென்னை அணிகளிடம் அடங்கியது. கடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூருவுக்கு அதிர்ச்சி அளித்தது.

டெல்லி அணியில் பேட்டிங்கில் டிரிஸ்டான் ஸ்டப்ஸ் (169 ரன்), சமீர் ரிஸ்வி (168 ரன்), லோகேஷ் ராகுல் (168 ரன்), பதும் நிசாங்கா, டேவிட் மில்லர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் லுங்கி இங்கிடி,கேப்டன் அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் உள்ளிட்டோர் கைகொடுக்கிறார்கள்.

ஏறக்குறைய சரிசம பலத்துடன் 4-வது வெற்றியை நோக்கி வரிந்துகட்டுவ தால் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக் கின்றன. இதில் 13-ல் ஐதராபாத்தும், 12-ல் டெல்லியும் வெற்றி கண்டுள் ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப் டன்), ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா. லியாம் லிவிங்ஸ்டன் அல்லது மதுஷன்கா, ஷிவாங் குமார், பிரபுல் ஹிங்கே, சகிப் ஹூசைன், இஷான் மலிங்கா.

டெல்லி: பதும் நிசாங்கா, லோகேஷ் ராகுல், அஷூதோஷ் ஷர்மா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அக்ஷர் பட்டேல், டேவிட் மில்லர். ஆகிப் நபி, லுங்கி இங்கிடி, குல்தீப் யாதவ், டி.நடராஜன், முகேஷ் குமார்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com