ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு
Published on: 

அபுதாபி,

அபுதாபியில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி டெல்லி அணியின் சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

இந்த ஜோடியின் அதிரடியான துவக்கத்தால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 38(27) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், தவானுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ஷிகர் தவான் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார்.

சீரான வேகத்தில் ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் அய்யர் 21(20) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் அதிரடியில் கலக்கினார். இதனால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 78(50) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ரிஷாப் பாண்ட் 2 (3) ரன்களும், அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 42(22) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா, ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com