ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு

இன்று நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு
Published on

கொல்கத்தா,

19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணி வீரர்களின் பட்டியல் வருமாறு:-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பின் ஆலன், ரஹானே (கேப்டன்), கேமரூன் கிரீன், ரகுவன்ஷி, ரோவ்மேன் போவல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், நவ்தீப் சைனி, வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி.

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், கூப்பர் கன்னோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சென், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com