ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் லக்னோ- ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று மோதல்
Published on

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.

லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியிடம் தோற்றது. அடுத்த இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவை வென்றது. அடுத்து குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகளிடம் வரிசையாக தோல்வியை தழுவியது.

லக்னோவை பொறுத்தவரை பேட்டிங் சீராக இல்லை. பேட்டிங் வரிசையில் பல மாற்றங்களை செய்து பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. 6 ஆட்டங்களை கடந்தும் சரியான ஆடும் லெவன் அணியை அடையாளம் காணமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. மார்க்ரம் (162 ரன்), மிட் செல் மார்ஷ் (155), ஆயுஷ் பதோனி, முகுல் சவுத்ரி (148), ரிஷப் பண்ட் (147) ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். ஆனால் நிகோலஸ் பூரன் (51 ரன்) சொதப்புவதும் பின்னடைவாக உள்ளது.

பந்து வீச்சில் பிரின்ஸ் யாதவ் (11 விக்கெட்), முகமது ஷமி, ஆவேஷ் கான், எம்.சித்தார்த் நம்பிக்கை அளிக்கின்றனர். சரிவில் இருந்து மீண்டு எழுச்சி பெற வேண்டுமானால் பேட்டிங், பந்துவீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி முதல் 4 ஆட்டங்களில் (சென்னை, குஜராத், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக வெற்றி பெற்று அமர்க்களமாக தொடங்கியது. அதன் பிறகு ஐதராபாத், கொல்கத்தா அணிகளிடம் அடுத்தடுத்து உதை வாங்கியது.

பேட்டிங்கில் வைபவ் சூர்யவன்ஷி (246 ரன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (223), துருவ் ஜூரெல் (181) சூப்பர் பார்மில் இருக்கின்றனர். ஆனால் மிடில் வரிசை தான் பலவீனமாக காணப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரர் கள் சீக்கிரம் அவுட் ஆகும் போது, கேப்டன் ரியான் பராக், ஹெட்மயர், ரவீந்திர ஜடேஜா போன்றோர் மிடில் வரிசையில் தாங்கிப்பிடித்தால் தான் இத்தகைய சூழலில் நெருக்கடியை சமாளிக்க முடியும். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் (10 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர் (8), நன்ரே பர்கர் மிரட்டுகி றார்கள்.

மொத்தத்தில், வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் மல்லுகட்டுவ தால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 4-ல் ராஜஸ்தானும், 2-ல் லக் னோவும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

லக்னோ: மிட்செல் மார்ஷ், ஆயுஷ் பதோனி, ரிஷப் பண்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன் அல்லது மேத்யூ பிரீட்ஸ்கே, மார்க்ரம், முகுல் சவுத்ரி, ஹிம்மாத் சிங், முகமது ஷமி, ஆவேஷ் கான் அல்லது மயங்க் யாதவ். பிரின்ஸ் யாதவ், எம்.சித்தார்த் அல்லது ஷபாஸ் அகமது, மொஷின் கான்.

ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, துருவ் ஜூரெல், ரியான் பராக் (கேப்டன்), ஹெட்மயர், டோனவன் பெரேரா, ஜடேஜா. ஜோப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் ஷர்மா அல்லது சந்தீப் ஷர்மா, நன்ரே பர்கர், யாஷ் ராஜ் பஞ்சா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com