

கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 65-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸை வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் பேட்டிங் ஆடிய மும்பை அணிக்கு தொடக்க அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரிக்கல்டன் 6(7) ரன்களிலும், ரோகித் சர்மா15(13) ரன்களிலும் அவுட்டாகினர். தொடர்ந்து களமிறங்கிய நமன் தீர் 0(3) ரன்களிலும் சூர்ய குமார் யாதவ் 15(6) ரன்களிலும் அவுட்டாகினர்.
இதையடுத்து திலக் வர்மா மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். அப்போது திலக் வர்மா7(12) மற்றும் பாண்டியா 7(7) ரன்கள் அடித்திருந்தபோது மழை குறிக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 8 ஓவர்கள் முடிவில் மும்பை 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆட்டம் எந்த ஓவர் குறைப்பும் இன்றி மீண்டும் துவங்கியது. களத்தில் இருந்த திலக் வர்மா - பாண்டியா ஜோடி நிதானமாக ஆடின ரன் சேர்த்தனர். அப்போது திலக் வர்மா 20(32) ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து பாண்டியாவும் 26(27) ரன்களில் அவுட்டானார். கார்பின் பாஷ் 32(18) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சவுரப் துபே, கேமரான் கிரீன் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா விளையாடி வருகிறது.