

ஜெய்ப்பூர்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரெல், ரியான் பராக் (கேப்டன்), டோனவன் பெரேரா, ரவீந்திர ஜடேஜா, சுபம் துபே, ஜோப்ரா ஆர்ச்சர், நன்ரே பர்கர், பிரிஜேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய்.
டெல்லி: லோகேஷ் ராகுல், பதும் நிசங்கா, சமீர் ரிஸ்வி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், நிதிஷ் ராணா, அக்ஷர் பட்டேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, கைல் ஜாமிசன், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், டி.நடராஜன்.