ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: புதிய சாதனை படைத்த முகமது ஷமி

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதல் பந்திலேயே கே.எல். ராகுல் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: புதிய சாதனை படைத்த முகமது ஷமி
Published on

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான முகமது ஷமி புதிய சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை முதல் பந்திலேயே விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை முகமது ஷமி நிகழ்த்தியுள்ளார்.

நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதல் பந்திலேயே டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தார்.

ஐபிஎல் தொடரில் முதல் பந்திலேயே அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள்:

5 (விக்கெட்டுகள்) – முகமது ஷமி

3 – பிரவீன் குமார்

3 – உமேஷ் யாதவ்

3 – டிரெண்ட் போல்ட்

3 – லசித் மலிங்கா

3 – புவனேஷ்வர் குமார்

3 – அசோக் டிண்டா

3 – பேட் கம்மின்ஸ்

ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். ஏற்கனவே இந்த பட்டியலில் முகம்மது ஷமி முதலிடத்தில் இருந்தாலும், 5 முறை என்ற அரிய இலக்கை எட்டி வரலாறு படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com