ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது.
Image Courtesy : @SunRisers
Image Courtesy : @SunRisers
Published on

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.

இதற்கிடையில், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதரபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா மற்று ஹெட் அபார தொடக்கம் கொடுத்தனர். அப்போது ஹெட் 26(16) ரன்கள் அடித்து அவுட்டானார். பின்னர் அபிஷேக்குடன் கிஷன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளே முடிவில் ஐதராபாத் அணி 63/1 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதத்தை கடந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்ட்ட நிலையில், 56(22) ரன்களில் அவுட்டானார். பின்னர் இணைந்த கிஷன் - கிளாசன் ஜோடி பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தது. இஷான் கிஷன் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

தொடர்ந்து கிளாசனும் அரைசதத்தை கடந்த நிலையில், 51(24) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி சந்தித்த முதல் 2 பந்துகளை சிக்சருக்கு விளாசினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஐதராபாத் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களுரு களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர்-விராட் கோலி களமிறங்கினர். இதில் விராட் கோலி, 15(11) ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல், 21 ரன்களில் அவுட்டானார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய வெங்கடேஷ் ஐயர், 44(19) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த கேப்டன் ரஜத் படிதார், 56(39) ரன்களில் ஆட்டமிழந்தார். க்ருணால் பாண்டியா 41(31) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சர்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஐதராபாத் அணிக்கு மேலும் 2 புள்ளிகள் கிடைத்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் இன்னும் 3-வது இடத்தில் நீடிக்கிறது. அதே சமயம், பெங்களூரு அணி தொடர்ந்து முதலிடத்திலும், குஜராத் அணி 2-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com