

புதுடெல்லி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணி கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணியுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் முடி வில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி கள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று (புதன்கிழமை) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.
டெல்லி அணி 'ஹாட்ரிக்' வெற்றியை குறி வைத்து களம் காணும். அதேநேரத்தில் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிக் கணக்கை தொடங்க குஜராத் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் சுவாரசியத் துக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டத்திலும், டெல்லி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. டெல்லியில் இன்று மழை பெய்வதற்கு 55 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.