ஐ.பி.எல்.: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்.: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 19 April 2025 3:04 PM IST (Updated: 19 April 2025 3:20 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அகமதாபாத்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (சனிக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.

அதன்படி மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா.

டெல்லி கேப்பிடல்ஸ்: அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, முகேஷ் குமார்

1 More update

Next Story