

புது டெல்லி,
ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 25) இரவு நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணி, ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் சந்தித்ததில், 13-ல் ஐதராபாத்தும், 9-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன.