ஐபிஎல் : மகத்தான சாதனை படைத்த ஐதராபாத் அணி

கொல்கத்தா அணிக்கு எதிரான 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ரன் மழை பொழிந்தனர்.
ஐபிஎல் : மகத்தான சாதனை படைத்த ஐதராபாத் அணி
Published on

ஐதராபாத்,

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த அணிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிடித்து மகத்தான சாதனை படைத்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான 68வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ரன் மழை பொழிந்தனர். தொடர்ந்து வாண வேடிக்கை காட்டிய அவர்கள், 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்தனர். இது, நடப்பு தொடரில் 2வது அதிகபட்ச ஸ்கோர். நடப்பு தொடரில், கடந்த மார்ச் 23ம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்து, ஐபிஎல் டி20 என்றால் எப்படி இருக்க வேண்டும் என பாடம் எடுத்தனர்.

கடந்த 2024ம் ஆண்டு சீசனிலும், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் 287 ரன் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் சாதனையை அரங்கேற்றி இருந்தனர். அதே ஆண்டில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி, 277 ரன் குவித்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த அணிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை சன்ரைசர்ஸ் அணியே பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com