ஐ.பி.எல்: ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமனம்

ஐ.பி.எல். போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 38 வயதான மலிங்கா, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். ஐ.பி.எல். போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 122 போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். மேலும், ஐபிஎல் லில் மும்பை அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்தார்.

இதுகுறித்து மலிங்கா கூறுகையில், ஐ.பி.எல். போட்டிக்கு மீண்டும் திரும்புவது அற்புதமான உணர்வை தருகிறது. ராஜஸ்தான் அணியிருடன் இணைவது எனக்கு கிடைத்த கவுரவமாகும். எங்களிடம் இருக்கும் வேகப்பந்து வீச்சு குழுவை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆட்ட திட்டத்தை அமல்படுத்துவதற்கும், அவர்களது ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டுக்கும் உதவுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com