ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
image courtesy:twitter/@IPL
image courtesy:twitter/@IPL
Published on

ஜெய்ப்பூர்,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் மீண்டும் நேற்று தொடங்கியது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட ராஜஸ்தான் அணி இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையில் ஆடும். ஆனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் உள்ள பஞ்சாப் அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடுமையாக போராடும். இதனால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் முதலில் பந்து வீச உள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com