

புதுடெல்லி,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், டெல்லி கேப்பிட் டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பணிச்சுமையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக அவர் ஐ.பி.எல். தொடரின் தொடக்க கட்ட ஆட்டங்களை தவறவிடுகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.