ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு
Published on

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பில் சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அந்த ஜோடியில் திரிபாதி 23(16) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சுப்மன் கில் 36(37) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா 29(20) ரன்களும், ஆண்ட்ரூ ரசூல் 9(11) ரன்களும், கேப்டன் மோர்கன் 34(23) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தினேஷ் கார்த்திக் 29(14) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் மற்றும் ரஷித் கான், பாசில் தம்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com