ஐ.பி.எல். கிரிக்கெட் டெல்லி, ஐதராபாத் அணியினர் துபாய் சென்றனர்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக டெல்லி, ஐதராபாத் அணியினர் துபாய் சென்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் டெல்லி, ஐதராபாத் அணியினர் துபாய் சென்றனர்
Published on

மும்பை,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது. இதையொட்டி பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய அணிகளில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் ஏற்கனவே துபாய் சென்று விட்டனர்.

எஞ்சிய இரு அணிகளான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியினரும் மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். ஒவ்வொரு அணி வீரர்களும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல், 3 முறை கொரோனா பரிசோதனைக்கு பிறகு அங்கு பயிற்சியை தொடங்குவார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com