ஐபிஎல்: தயாரான விராட் கோலி...உற்சாகத்தில் பெங்களூரு ரசிகர்கள்

பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல்: தயாரான விராட் கோலி...உற்சாகத்தில் பெங்களூரு ரசிகர்கள்
Published on

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது. தொடக்கப் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

ஐபிஎல் தொடருக்காக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பெங்களுரு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com