ஐ.பி.எல்.: வெற்றி கணக்கை தொடங்க போவது யார்..? கொல்கத்தா - ராஜஸ்தான் இன்று மோதல்

இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளன.
ஐ.பி.எல்.: வெற்றி கணக்கை தொடங்க போவது யார்..? கொல்கத்தா - ராஜஸ்தான் இன்று மோதல்
Published on

கவுகாத்தி,

18-வது ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெற உள்ள 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ள் அணிகள் மோதுகின்றன.

நட்டபு தொடரில் இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளன. அதன்படி நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மறுபுறம் முன்னாள் சாம்பியன் ஆன ராஜஸ்தான் ராயல்ஸ், தனது முதல் லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியிடம் பணிந்தது.

இதனால் இந்த ஆட்டத்தின் மூலம் வெற்றி கணக்கை தொடங்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com