இரானி கோப்பை: ரெஸ்ட் ஆப் இந்திய அணி அறிவிப்பு...ரிஷப் பண்ட் கேப்டனாக நியமனம்

ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரானி கோப்பை: ரெஸ்ட் ஆப் இந்திய அணி அறிவிப்பு...ரிஷப் பண்ட் கேப்டனாக நியமனம்
Published on

புதுடெல்லி,

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கேப்டனாகவும், சர்பராஸ் கான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சனத் சங்வான், ஷிகர் மோகன், சுதீப் கராமி, சர்பராஸ் கான், ஸ்மரன் ரவிச்சந்திரன் ஆகியோர் பேட்டிங் வரிசையில் இடம்பிடித்துள்ளனர். மனவ் சுதார், சாரன்ஷ் ஜெயின், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், முகேஷ் சவுத்ரி ஆகியோர் பந்துவீச்சு துறையில் இடம்பெற்றுள்ளனர்.

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி:

ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சனத் சங்வான், ஷிகர் மோகன், சுதீப் கராமி, சர்பராஸ் கான் (துணைக் கேப்டன்), ஸ்மரன் ரவிச்சந்திரன், மனவ் சுதார், சாரன்ஷ் ஜெயின், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், முகேஷ் சவுத்ரி, ஆர்யன் ஜூயல் (விக்கெட் கீப்பர்), ஆர்யன் பாண்டே, அனுகுல் ராய், ஆயுஷ் தோசேஜா.

X

Daily Thanthi
www.dailythanthi.com