

அயர்லாந்து அணியின் லெக் ஸ்பின்னர் பென் வைட் (Ben White), தனது 28 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியின் மூலம் அயர்லாந்து அணியில் அறிமுகமான அவர், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்று டெஸ்ட், இரண்டு ஒருநாள் மற்றும் 38 டி20 சர்வதேசப் போட்டிகள் என மொத்தம் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2021ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டியின் மூலம் அயர்லாந்து அணியில் அறிமுகமான அவர், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்று டெஸ்ட், இரண்டு ஒருநாள் மற்றும் 38 டி20 சர்வதேசப் போட்டிகள் என மொத்தம் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 2021, 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைகளில் அயர்லாந்து அணியின் வீரராக இடம்பெற்றுள்ளார். குறிப்பாக, டி20 போட்டிகளில் தனது லெக் ஸ்பின் பந்துவீச்சு மற்றும் பந்தின் வேகத்தை மாற்றி வீசும் திறன் மூலம் கவனம் பெற்றார். கடந்த 2025 டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியதே அவரது கடைசி சர்வதேசப் போட்டியாகும். தனது கிரிக்கெட் பயணத்தில் நாட்டுக்காக விளையாட வாய்ப்பளித்த அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும், சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள பென் வைட், இனி வெளியில் இருந்து அயர்லாந்து அணியை ஆதரிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.