

விந்தோக்,
4வது ஒருநாள் போட்டியில் நமீபியாவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றிபெற்றது.
நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் நமீபியா முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், நமீபியா - அயர்லாந்து இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. விந்தோக் நகரில் உள்ள மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 298 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டிம் டெக்டர் அதிகபட்சமாக 73 ரன்கள் சேர்த்தார். நமீபியா தரப்பில் அந்த அணியின் ஜேஜே ஸ்மித் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய நமீபியா 41 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கிரீன் அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். அயர்லாந்து அணியின் ஜெய் முந்திரா சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நமீபியாவை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 2-2 என்ற புள்ளிகள் கணக்கில் சம நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.