மும்பையை விட்டு கொல்கத்தா செல்கிறாரா ஹர்திக் பாண்டியா? - அந்த 2 வீரர்களை கேட்கும் மும்பை

ஹர்திக் பாண்டியாவை பரிமாற்றம் செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா
Published on: 

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, அடுத்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீரர்கள் பரிமாற்றம்

ஐ.பி.எல். 2027 தொடருக்கான அணியை தயார் செய்யும் பணியில் அணிகள் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ஹர்திக் பாண்டியாவை பரிமாற்றம் செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக கொல்கத்தா அணியில் உள்ள இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அங்க்ரிஷ் ரகுவன்ஷி, வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா ஆகிய இருவரையும் மும்பை அணி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கொல்கத்தா தயக்கம்

ஆனால், ரகுவன்ஷி மற்றும் ஹர்சித் ராணா ஆகிய இருவரையும் விடுவிக்க கொல்கத்தா அணி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. மேலும், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங் ஆகிய முக்கிய வீரர்களை எந்தவொரு வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்திலும் சேர்க்க கொல்கத்தா நிர்வாகம் விரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, ஐ.பி.எல். 2027 தொடரில் ஹர்திக் பாண்டியா எந்த அணிக்காக விளையாடுவார் என்பது அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே தெரியவரும்.

X