பார்த்திவ் படேல் புதிய தலைமை தேர்வாளரா? இந்திய கிரிக்கெட்டில் பரபரக்கும் தகவல்

இந்திய வீரர் பார்த்திவ் படேலின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பார்த்திவ் படேல் புதிய தலைமை தேர்வாளரா? இந்திய கிரிக்கெட்டில் பரபரக்கும் தகவல்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைமை தேர்வாளர் அஜித் அகர்கருக்கு பதிலாக முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் படேலின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் அகர்கர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய ஆண்கள் மூத்த அணியின் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றார். அவரது தற்போதைய பதவிக்காலம் அக்டோபர் தொடக்கத்தில் நிறைவடைய உள்ளது.

அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா அல்லது புதிய தலைமை தேர்வாளர் நியமிக்கப்படுவாரா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை.

அஜித் அகர்கருக்கு பதிலாக புதிய தலைமை தேர்வாளரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேலின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தேர்வுக்குழு தொடர்பான முடிவுகளை எடுக்க வாரிய நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, அஜித் அகர்கர் தொடர்ந்து தலைமை தேர்வாளராக நீடிப்பாரா அல்லது அவருக்கு பதிலாக புதிய நபர் நியமிக்கப்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com