மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா சூர்யகுமார்? டிரேட் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா சூர்யகுமார்? டிரேட் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
Published on: 

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவை டிரேட் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அவர் தொடர்ந்து மும்பை அணியிலேயே நீடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரேட்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், சூர்யகுமார் யாதவின் பெயரும் டிரேட் பட்டியலில் இடம்பெற்றதாகச் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, அவரைத் தங்கள் அணிக்கு கொண்டு வர சில அணிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், சூர்யகுமார் யாதவை அணியிலிருந்து விடுவிக்கவோ அல்லது வேறு அணிக்கு மாற்றவோ மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் பல வெற்றிகளில் முக்கியப் பங்காற்றியுள்ள சூர்யகுமார் யாதவ், அணியின் பேட்டிங் வரிசையில் மிக முக்கியமான வீரராக இருந்து வருகிறார். அதிரடியான பேட்டிங், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ரன்கள் குவிக்கும் திறன் மற்றும் நெருக்கடியான நேரங்களில் அணிக்காகப் பொறுப்புடன் விளையாடும் அனுபவம் ஆகியவை அவரை அணியின் முக்கிய வீரராக மாற்றியுள்ளன. மேலும், இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வரும் அவர், சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.

X