

மும்பை,
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றமளித்தது. இதைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியானது.
2027 சீசனுக்கு புது கேப்டனை நியமிக்க மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்திருப்பதால், இவரை, டிரேடிங்கில் அனுப்ப அணி நிர்வாகம் விரும்புகிறது.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை வாங்க பல்வேறு அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சென்னை அணியும் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங்கில் வாங்க மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது.