இஷான் கிஷனின் காதலி... யார் இந்த ஆதிதி ஹுண்டியா?

இறுதிப்போட்டியின் போது, இஷானின் காதலி ஆதிதி ஹுண்டியா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இஷான் கிஷனின் காதலி... யார் இந்த ஆதிதி ஹுண்டியா?
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் சமீபத்தில் தனது ஆட்டத்தால் மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையாலும் கவனம் ஈர்த்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் அதிரடி அரைசதம் விளாசினார். இப்போட்டியின் போது, அவரது காதலி ஆதிதி ஹுண்டியா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

யார் இந்த ஆதிதி ஹுண்டியா?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அதிதி ஹுண்டியா. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு 'மிஸ் டிவா' பட்டத்தை வென்றார். அதற்கு முன்பு 'பெமினா மிஸ் இந்தியா 2017-ல் இறுதி சுற்று வரை சென்றார். மாடலிங் மற்றும் பேஷன் துறையில் கவனம் செலுத்தி வரும் இவர், இன்ஸ்டாகிராமில் 2.85 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

Also Read
நடிகையை கரம் பிடிக்கும் பிரித்வி ஷா ...யார் இந்த அகிருதி அகர்வால்?
இஷான் கிஷனின் காதலி... யார் இந்த ஆதிதி ஹுண்டியா?

சமூக சேவையிலும் ஆர்வம் கொண்ட அவர், “சங்கினி” என்ற குழுவின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். பிரபல பாடகர் அர்மான் மாலிக்கின் “டூதே காப்(Tootey Khaab)” இசை வீடியோவில் இவர் நடித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com