நடிகையை கரம் பிடிக்கும் பிரித்வி ஷா ...யார் இந்த அகிருதி அகர்வால்?

அகிருதி தெலுங்கில் சைகோலஜிக்கல் கிரைம் திரில்லர் “ட்ரிமுகா” மூலம் ஹீரோயினாக அறிமுகானார்.
நடிகையை கரம் பிடிக்கும் பிரித்வி ஷா ...யார் இந்த அகிருதி அகர்வால்?
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, சமூக ஊடகப் பிரபலம் மற்றும் நடிகையுமான அகிருதி அகர்வாலுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் உலக மகளிர் தினத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

யார் இந்த அகிருதி அகர்வால்?

அகிருதி அகர்வால் லக்னோவில் பிறந்தார். படிப்புக்காக மும்பைக்கு வந்த அவர் சமூக ஊடகங்களில் பிரபலமாகி, நடனம், பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் வீடியோக்களால் 3.4 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார்.

ஆக்ரிதி மும்பையில் உள்ள நிர்மலா மேமோரியல் பவுண்டேஷன் கல்லூரி-இல் இருந்து அவர் பச்சிலர் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் முடித்துள்ளார்.

அவர் தெலுங்கில் சைகோலஜிக்கல் கிரைம் திரில்லர் “ட்ரிமுகா” மூலம் ஹீரோயினாக அறிமுகானார். இப்படத்தை ராஜேஷ் நாயுடு இயக்கினார்.

Also Read
ரோகித்தின் சாதனை உடைப்பு...உலகின் தலைசிறந்த டி20 கேப்டன் ஆன சூர்யகுமார் யாதவ்!
நடிகையை கரம் பிடிக்கும் பிரித்வி ஷா ...யார் இந்த அகிருதி அகர்வால்?

கடைசி சில ஆண்டுகளாக பேட்டிங் மற்றும் பிட்னஸ் பிரச்சினைகளால் பிரித்வி ஷா பாதிக்கப்பட்டார். 2025 ஐபிஎல் சீசனில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை, இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் 2026 மினி ஆக்சனில் டெல்லி கேபிடல்ஸ் மீண்டும் அவரை ரூ.75 லட்சம் அடிப்படை விலையில் வாங்கியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com