இஷானுக்கு 4, அபிஷேக்குக்கு 2...இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இந்தியாவில் கடைசியாக மோதியது எப்போது?

வியாழக்கிழமை ஜிம்பாப்வே அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இஷானுக்கு 4, அபிஷேக்குக்கு 2...இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இந்தியாவில் கடைசியாக மோதியது எப்போது?
Published on

அகமதாபாத்,

டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர்-8 சுற்றுப் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை சந்தித்தது.

187 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை சிக்கலாக்கியுள்ளது.

மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்தியா பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அடுத்ததாக வியாழக்கிழமை ஜிம்பாப்வே அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் இந்தியா தொடரிலிருந்து வெளியேறும் அபாயம் உருவாகும்.

இதற்கிடையில், 2002-ம் ஆண்டுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணி இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக எந்தப் போட்டியையும் விளையாடவில்லை. இரு அணிகளும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே முறை மட்டுமே மோதியுள்ளன. அது டி20 உலகக் கோப்பை 2022 தொடரில் மெல்போர்னில் நடைபெற்றது. அப்போது இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் கடைசியாக இந்தியாவில் மோதியது 19 மார்ச் 2002 அன்று குவஹாத்தியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில். அப்போது இந்தியா 333 ரன்கள் எடுத்த நிலையில், ஜிம்பாப்வே 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Also Read
’டக்’ அவுட் பட்டியலில் முதலிடம் - டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் மோசமான சாதனை
இஷானுக்கு 4, அபிஷேக்குக்கு 2...இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இந்தியாவில் கடைசியாக மோதியது எப்போது?

அந்த நேரத்தில் தற்போதைய இந்திய தொடக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா மிகவும் சிறியவர்கள். 1998 ஜூலை 18-ல் பிறந்த இஷான் கிஷனுக்கு அப்போது 4 வயது, 2000 செப்டம்பர் 4-ல் பிறந்த அபிஷேக் சர்மாவுக்கு வெறும் 2 வயதுதான் என்பது குறிப்பிடத்த்க்கது.

இந்நிலையில், 24 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ள இந்தியா-ஜிம்பாப்வே மோதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com