’டக்’ அவுட் பட்டியலில் முதலிடம் - டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் மோசமான சாதனை

11 முறை இந்திய வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் பவிலியன் திரும்பியுள்ளனர்.
’டக்’ அவுட் பட்டியலில் முதலிடம் - டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் மோசமான சாதனை
Published on

சென்னை,

சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்தது. வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை துரத்த முடியாமல், இந்திய அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த தோல்வியுடன் மோசமான ஒரு சாதனையையும் இந்திய அணி பதிவு செய்துள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், அதிக முறை ‘டக்’ (0 ரன்) அவுட் ஆன வீரர்கள் உள்ள அணியாக இந்தியா மாறியுள்ளது. மொத்தம் 11 முறை இந்திய வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் பவிலியன் திரும்பியுள்ளனர்.

டக் அவுட் பட்டியல்:

அபிஷேக் சர்மா - 3 முறை

அக்சர் படேல் - 2 முறை

சிவம் துபே - 1 முறை

இஷான் கிஷன் - 1 முறை

ஹர்திக் பாண்ட்யா - 1 முறை

ரிங்கு சிங் - 1 முறை

வருண் சக்கரவர்த்தி - 1 முறை

பும்ரா - 1 முறை

Also Read
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி.?
’டக்’ அவுட் பட்டியலில் முதலிடம் - டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் மோசமான சாதனை

இந்திய அணிக்கு அடுத்தபடியாக இத்தாலி(8டக்), ஓமன்(7), பாகிஸ்தான் (6 டக்) ஆகிய அணிகள் உள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தப் போட்டியிலேயே 3 இந்திய வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். இஷான் கிஷன், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.

இந்த தோல்வியால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெட் ரன் ரேட் கடுமையாக குறைந்துள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகளில் இந்தியா பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com