கனவு போல் இருக்கிறது... கடைசி பந்தில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தது எப்படி? மொஹித் உல்வா நெகிழ்ச்சி!

இந்தியாவுக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை தேடித்தந்தார்.
கனவு போல் இருக்கிறது... கடைசி பந்தில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தது எப்படி? மொஹித் உல்வா நெகிழ்ச்சி!
Published on: 

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர் இளம் வீரர் மொஹித் உல்வா. 338 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 252 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த மொஹித் உல்வா மற்றும் மனால் சவுகான் இணைந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மொஹித் உல்வா பவுண்டரி அடித்து இந்தியாவுக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை தேடித்தந்தார். அவர் 26 பந்துகளில் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மொஹித் உல்வா

இந்த வெற்றி குறித்து மொஹித் உல்வா கூறுகையில், "எனது வாழ்க்கையில் இது ஒரு கனவு போல் இருக்கிறது. இப்படியொரு முக்கியமான தருணத்தில் விளையாடுவதற்கு என்னைத் தேர்வு செய்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" . கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தால் 8 ரன்கள் எளிதாக எடுக்க முடியும் என்று நம்பியதாகவும், அந்த ஒரு பந்துக்காகவே காத்திருந்ததாகவும் தெரிவித்தார். கடைசி பந்து வரை ஆட்டம் சென்றாலும் தன்னிடம் நம்பிக்கை இருந்ததாகவும், பந்தை எதிர்கொண்டபோது எக்ஸ்ட்ரா கவர் மற்றும் லாங்-ஆப் இடையே பெரிய இடைவெளி இருந்ததால் அந்தப் பகுதியில் அடிக்க முடிவு செய்ததாகவும் கூறினார்.

சவுராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மொஹித் உல்வா, தனது கிரிக்கெட் பயணத்தில் தந்தையின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தனது தந்தை ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருவதாகவும், அவர்தான் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்குவதற்கு முக்கிய காரணம் என்றும் கூறினார். அடுத்ததாக சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சவுராஷ்டிரா சீனியர் அணிக்காக சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபிப்பதே இலக்கு என்றும், எதிர்காலத்தில் இந்திய சீனியர் அணிக்காக விளையாட விரும்புவதாகவும் மொஹித் உல்வா தெரிவித்துள்ளார்.

X