தோனிக்கு எதிராக திட்டங்கள் தீட்டுவது மிகவும் கடினமானது - சஞ்சு சாம்சன்
தற்போது கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கவர் டிரைவ் வைத்திருக்கக்கூடிய வீரர் என்றால் அது விராட் கோலிதான் என சாம்சன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதமும் அடங்கும்,
இந்நிலையில், சஞ்சு சாம்சன், ஒரு யூ டியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தோனி, விராட் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கு சாம்சன் பதில் அளித்து கூறியதாவது,
நாங்கள் ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக விளையாடுவதற்கு திட்டம் தீட்டும் பொழுது மகேந்திர சிங் தோனியின் பெயர் வந்தால், அவரை அப்படியே விட்டு விடுங்கள் அடுத்த வீரர் பற்றி பேசலாம் என்று நகர்ந்து விடுவோம். காரணம் என்னவென்றால் தோனிக்கு எதிராக திட்டங்கள் தீட்டுவது மிகவும் கடினமானது.
இதேபோல் தற்போது கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த கவர் டிரைவ் வைத்திருக்கக்கூடிய வீரர் என்றால் அது விராட் கோலிதான்.இவ்வாறு அவர் கூறினார்.