ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாதது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது - ஹர்பஜன் சிங்

இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்த பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படாதது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ரோகித் சர்மாவை தேர்வு செய்தால் கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும்.

ஏனெனில் அவர் சமீபத்தில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்தார். ஒயிட் பால் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் அவர் இந்திய கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவராக இருந்து வருகிறார். குறைந்தபட்சம் இந்த தொடருக்காவது அவருக்கு கேப்டன்ஷிப் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com