

லக்னோ,
மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. லக்னோவில் நேற்று நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சந்திமாலின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் 'புஷ்பா' திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் தாடியை ஸ்டைலாக தடவும் முகபாவனையை ஜடேஜா செய்தார்.
இதை கண்ட ரோகித் சர்மா வியப்புடன் கட்டிப்பிடித்து பாராட்டினார். தற்போது இந்த காட்சியை ரசிகர்கள் அதிகளவில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்