விராட் கோலியின் 2 மாபெரும் சாதனைகளை தகர்த்த ஜெய்ஸ்வால்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
விராட் கோலியின் 2 மாபெரும் சாதனைகளை தகர்த்த ஜெய்ஸ்வால்
Published on

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 135 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் ரோகித் 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய ஜெய்ஸ்வால், மற்றொரு இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலியின் 2 மாபெரும் சாதனைகளை தகர்த்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

1.இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் (655) மாபெரும் சாதனையை தகர்த்த ஜெய்ஸ்வால் (712) புதிய சாதனை படைத்துள்ளார்.

2. டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் 2-வது இடத்தில் இருந்த ஜெய்ஸ்வால் தற்போது அவரை முந்தி தனி ஆளாக 2-வது இடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:-

1. சுனில் கவாஸ்கர் - 774 ரன்கள்

2.ஜெய்ஸ்வால் - 712 ரன்கள்

3. விராட் கோலி- 655 ரன்கள்

4. விராட் கோலி - 610 ரன்கள்

5. விஜய் மஜ்ரேக்கர் - 586 ரன்கள்

மேலும் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்தியர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com