இந்திய அணி வீரர்களை சந்தித்த ஜப்பான் தூதர்

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஜப்பான் இருதரப்பு டி20 போட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய அணி வீரர்களை சந்தித்த ஜப்பான் தூதர்
Published on

புதுடெல்லி,

இந்தியா-ஜப்பான் அணிகள் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் இந்திய அணி வீரர்கள், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஓனோ கெய்ச்சியை டெல்லியில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் கிரிக்கெட் மூலம் இரு நாடுகளுக்கு இடையே உருவாகி வரும் புதிய உறவு குறித்து பேசப்பட்டது.

இந்திய அணி வீரர்களை சந்தித்த ஜப்பான் தூதர், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஜப்பான் இருதரப்பு டி20 போட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்தப் போட்டி இரு நாடுகளின் கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com