

துபாய்
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறி வருகிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபெட் மெக்காய் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து விலகியுள்ளார் .
மெக்காய்க்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.