968 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்கும் ஜஸ்பிரித் பும்ரா

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
968 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்கும் ஜஸ்பிரித் பும்ரா
Published on

அகமதாபாத்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சுமார் 968 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் (ODI) கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

பயிற்சி

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், வருகிற 14-ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் இந்திய அணிக்கு திரும்புகிறார். இதற்காக அகமதாபாத்தில் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

968 நாட்களுக்குப் பிறகு

பும்ரா கடைசியாக 2023 நவம்பர் 19-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது சரியாக 968 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நீல ஜெர்சியில் களமிறங்க உள்ளார்.

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கு பும்ராவின் வருகை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இலங்கை டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, இந்திய அணி ஆகஸ்ட் 15 முதல் 27-ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் காலி மைதானத்திலும், 2-வது டெஸ்ட் கொழும்பிலும் நடைபெறவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com