இலங்கை அணி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக ஜெயசூர்யா முடிவு

இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது அந்த அணி ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாகியது.
இலங்கை அணி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக ஜெயசூர்யா முடிவு
Published on

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது அந்த அணி ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாகியது.

இந்த நிலையில் இலங்கை அணி பயற்சியாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் ஜெயசூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுடன் இலங்கை வெளியேறியதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com