கோலிக்கு ‘நோ’…ஜிதேஷ் சர்மா வெளியிட்ட ஆல் டைம் ஐ.பி.எல் லெவன்

ஜிதேஷ் சர்மா தேர்வு செய்த அணியில் தற்போதுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Jitesh Sharma picks his all-time IPL XI, no place for Virat Kohli
Published on

மும்பை,

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆன ஜிதேஷ் சர்மா, ஐ.பி.எல். வரலாற்றில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

அதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திரசிங் தோனியை மட்டுமே அவர் தேர்வு செய்துள்ளார். ஜிதேஷ் சர்மா தேர்வு செய்த அணியில் தற்போதுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

ஜிதேஷ் சர்மா தேர்வு செய்த ஆல் டைம் ஐ.பி.எல். பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, கில்கிறிஸ்ட், காலிஸ், ஏபி டி வில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, மகேந்திரசிங் தோனி, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஹேசல்வுட்

இந்த பட்டியலில் கோலிக்கு இடமில்லாதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com