6 பந்துகள்... 5 சிக்ஸர்கள்... விதர்பா லீக்கில் ருத்ரதாண்டவம் ஆடிய ஜிதேஷ் சர்மா - வைரல்

10 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
6 பந்துகள்... 5 சிக்ஸர்கள்...  விதர்பா லீக்கில் ருத்ரதாண்டவம் ஆடிய ஜிதேஷ் சர்மா - வைரல்
Published on

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா, தற்போது நடைபெற்று வரும் விதர்பா புரோ டி20 லீக்கில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார்.

வெறும் 10 பந்துகளில் 36 ரன்கள்

விதர்பா புரோ டி20 லீக்கில் 'நெகோ மாஸ்டர் பிளாஸ்டர்' அணியின் கேப்டனாக விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா, 'இந்தியா வாரியர்ஸ்' அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். களமிறங்கிய அவர், வெறும் 10 பந்துகளில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

6 பந்துகளில் 5 சிக்ஸர்கள்

இன்னிங்ஸின் 18-வது ஓவரின் கடைசி பந்தில் தர்ஷன் நல்கண்டே பந்துவீச்சில் ஜிதேஷ் சர்மா முதல் சிக்ஸரை விளாசினார். அதனைத் தொடர்ந்து 19-வது 3 சிக்சர்களை பறக்கவிட்டார். பின்னர் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை அடித்தார். இதன் மூலம் தொடர்ந்து எதிர்கொண்ட ஆறு பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ஜிதேஷ் சர்மாவின் இந்த மின்னல் வேக இன்னிங்ஸ், மைதானத்தில் இருந்த ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com