ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே உள்ளிட்ட சிறந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
Published on: 

மஸ்கட்,

13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் 8 முறை சாம்பியனான இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், மலேசியா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ் வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் மலேசியா-இலங்கை. ஆப்கானிஸ்தான்- வங்காளதேசம் (இந்திய நேரப்படி காலை 10.30 மணி) அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி

இந்த போட்டியில் லக்ஷயா ராஜ்சந்தானி தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக்கின் மகன் ஆர்யவீர், முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே உள்ளிட்ட சிறந்த வீரர்கள் அணியில் அங்கம் வகிக்கின்றனர். இந்திய அணி தனது முதலாவது லீக்கில் நாளை நேபாளத்தை சந்திக்கிறது.

X