

மஸ்கட்,
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
13வது ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் - 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன.
ஓமன் நாட்டின் அல் அம்ரட் நகரில் நடைபெறும் ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, நேபாள அணி களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.