

அல் அமரத்,
ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
ஓமனில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த நேபாள அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 42.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் தர்ஷ் சோனர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
இந்தியா அபார வெற்றி
இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஆர்யவீர் சேவாக், லக்சியா ராஜேஷ் ராய்சந்தானி இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
ஆர்யவீர் சேவாக் 52 பந்துகளில் 70 ரன்களும், லக்சியா ராஜேஷ் ராய்சந்தானி 63 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 19.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தியது.