ஜூனியர் ஆசிய கோப்பை அரைஇறுதி: இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின.
ஜூனியர் ஆசிய கோப்பை அரைஇறுதி:  இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்
Published on: 

13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட் டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் பாகிஸ்தான், இந்தியா (ஏ பிரிவு), ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின.

இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதல்

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.இந்திய அணி லீக் ஆட்டங்களில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகத்தை தோற்கடித்தது. பாகிஸ்தானிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற் றது. தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

லக்ஷயா ராய்சந்தானி தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் ஆர் யவிர் ஷேவாக் (ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 252 ரன்கள்), அர்ஜூன் ராஜ்புத் (ஒரு சதம் உள்பட 111 ரன்), வினீத்தும், பந்து வீச்சில் இஷான் சோத் (8 விக்கெட்), முனால் சவுகானும் (5) நல்ல நிலையில் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை அணிகளை வரிசையாக துவம்சம் செய்து தனது பிரிவில் முதலி டம் பிடித்து அரைஇறுதியை எட்டியது. சோகைல் கான் தலைமையிலான அந்த அணியில் பேட்டிங்கில் பைசல் ரஹிமி (116 ரன்), சுப்ஹான் ஜாகைல் (111 ரன்), அபிதுல்லாவும். பந்து வீச்சில் நூர் அலி (13 விக்கெட்), அமிர் ஹம்சாவும் (5) சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

X