ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் இன்று பலப்பரீட்சை

சார்ஜாவில் நடக்கும் 2 வது அரையிறுதியில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி போட்டியில் இந்தியா - வங்காளதேசம் இன்று பலப்பரீட்சை
Published on

சார்ஜா,

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.

இந்த தொடரின் கடைசி லீக்கில் இலங்கைக்கு எதிராக வங்காளதேச அணி முதலில் பேட் செய்ய தொடங்கியது. வங்காளதேச அணி 32.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்த போது, நடுவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் போட்டி பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதன் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இந்த நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெறுகிறது.

இன்று நடக்கும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்-இலங்கை (காலை 11 மணி), சார்ஜாவில் நடக்கும் 2-வது அரைஇறுதியில் இந்தியா- வங்காளதேசம் (காலை 11 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com