ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கங்கோடி திரிஷா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
image courtesy: ICC
image courtesy: ICC
Published on

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் கோலாலம்பூரில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது.

20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணி 82 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் மோனாலிசா லெகோடி ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கங்கோடி திரிஷா 3 விக்கெட்டுகளும், வைஷ்னவி சர்மா, ஆயூஷி சுக்லா மற்றும் பருனிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 83 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com