

புதுடெல்லி,
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கேன் வில்லியம்சன் ஓய்வு தொடர்பாக இந்திய வீரர் விராட் கோலி கூறியதாவது,
எதிரணியில் இருந்து நண்பராக மாறியவர் நீங்கள்(கேன் வில்லியம்சன்). பல ஆண்டுகளாக நீங்கள் பேட்டிங் செய்வதையும், உங்களுக்கு எதிராகப் போட்டியிட்டதும் மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் அதையெல்லாம் விட, நமது நட்பையும், விளையாட்டு மற்றும் அது சார்ந்த விஷயங்களில் நாம் பகிர்ந்து கொண்ட கருத்துகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். நாம் சந்திக்கும் அல்லது பேசும் ஒவ்வொரு தருணத்தையும் நான் எப்போதும் போற்றுகிறேன். உங்களுக்கு எப்போதும் சிறந்தவை மட்டுமே அமைய வாழ்த்துகிறேன். உங்கள் பங்கைச் சிறப்பாக ஆற்றிவிட்டீர்கள். என தெரிவித்துள்ளார்.