விராட் கோலியுடன் ‘செல்பி’: மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் மீது வழக்கு பதிவு..!!

நேற்று நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இடைவேளையின்போது தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர்.

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது, ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து மைதானத்திற்குள் நுழைந்தனர்.

அவர்களில் ஒரு ரசிகர் தனது மொபைல் போன் மூலம் கோலி அனுமதியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதனால் அந்த பகுதியில் சிறிய சலசலப்பு காணப்பட்டது. இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்புப் பணியாளர்கள் ரசிகர்களை வெளியேற்றினர்.

இந்நிலையில் போட்டியின் இடைவேளையின்போது தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த 4 பேர் (அதில் இரண்டு பேர் சிறுவர்கள்) மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com